நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…!!

வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாக தெரவிக்கப்படுகிறது.

இதன் கீழ் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கும் பல கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கிராமங்களில் வசிக்கும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட உள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள் ஆரம்பித்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.