நுவரெலியாவில் மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டிய கணவன்

ஊவாபரணகம, கலஹகம அம்பலம சந்திக்கு அருகில் கணவன், மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாய் தகராறு முற்றியுள்ளது.

 

இதனால் கணவன் மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கடும் காயமடைந்த பெண் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

நேற்று காலை 10.30க்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 27 வயதுடைய அனுலாவத்தி என்ற பெண்ணே காயமடைந்துள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் ஊவாபரணகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.