நீரை சுத்தப்படுத்தும் வாழைப்பழத் தோல்!

வாழைப்பழத்தோலை வைத்து குடிநீரை சுத்தம் செய்ய முடியுமா? ஆராட்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்!
குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள்.
இந்த ஆராய்ச்சியை பிரேசில் “இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின் சியாஸ் ” நிறுவனம் மேற்கொண்டது.shutterstock_113120080
சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம்.

 

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில்தெரிவித்துள்ளன. நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது.

 

பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள்.