“நீயா 2” படத்தில் நாகமாகும் ராய் லட்சுமி!

கமல்ஹாசன், விஜயகுமார், மஞ்சுளா, முத்துராமன், ஸ்ரீப்ரியா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘நீயா’.fdsg

1979-ல் வெளியான இந்தப் படம், பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. ’நீயா 2’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் ராய் லட்சுமி 3 வேடத்தில் நடிக்கிறார். மற்றும் கேத்தரின் தெரசா, வரலட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.download

இதில் நடிப்பது பற்றி ராய் லட்சுமி கூறும்போது, ’ஃபேண்டசி திரில்லர் படமான இதில் நான் மூன்று வேடத்தில் நடிக்கிறேன். அதில் ஒன்று நாகப்பாம்பு வேடம். பாம்பை மையப்படுத்திய கதைதான் என்றாலும் வெவ்வேறு கால கட்டங்களில் நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கேத்தரின், வரலட்சுமி ஆகியோர் வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் காட்சிகளில் வருவார்கள். எனக்கும் அவர்களுடன் காட்சிகள் இருக்கிறது. இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறேன். இதையடுத்து மலையாளத்தில் மம்மூட்டியுடன் ஆறாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறேன் என்றார்.