நாவில் நீரூர வைக்கும் சீஸ் போண்டா..!

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ,
பச்சைப்பட்டாணி – 3 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவல் – 1/2 கப்,
எலுமிச்சைப்பழச்சாறு – 1/2 பழம்,
வெங்காயம் – 3,
நறுக்கிய பச்சைமிளகாய் – 4,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
மேல் மாவிற்கு…
கடலை மாவு – 1 கப்,
உப்பு – சிறிது,
சமையல் சோடா – 1 சிட்டிகை,
ஆரஞ்சு ஃபுட் கலர் – சிறிது,
அரிசி மாவு – 1/4 கப்.

செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை மாவுடன் சமையல் சோடா சேர்த்து சலித்து உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர் கலந்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்து உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், பச்சைப் பட்டாணி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவில் உருண்டைகளை முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு சீஸ் போண்டா  தயார்.

chees bondaa