நாயைக் கண்டுப்பிடிக்க பத்தாயிரம் ரூபாய் பரிசு-பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான த்ரிஷா வளர்த்து வந்த மஃப்பின் என்ற பெண் நாய் சில தினங்களுக்கு முன் காணாமல் போய்யுள்ளது. இதனையடுத்து நாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் பரிசு தரப்படும் என திரிஷா டுவீட்ர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து திரிஷாவின் டுவிட்ர் பதிவிற்கு பலரும் கலாய்த்து பதிவிட்டுள்ளனர்.

“பப்பிம்மா வேட்பு மனு நிராகரிப்பு இப்போது பப்பியை காணவில்லை” என்று விளம்பரமா என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

திரிஷாவின் டுவிட்டர் விளம்பரத்தில் ஒரு  தொலைபேச இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை திரிஷாவின் தொலைபேசி இலக்கம் என நினைத்து  ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பு கொள்கின்றனர்.

இது குறித்து த்ரிஷா கூறுகையில் அது திரிஷாவின் தோழியின் கைபேசி இலக்கம் என்றும்  தொலைந்த நாய் தோழியுடையதும் எனத் தெரிவித்துள்ளார்.