நாமலை ஜனாதிபதியாக்கும் மகிந்தவின் கனவில் உதித்த சிலை வெறி !

2015 வரை   தொடர்  ஜனாதிபதியாக இருந்தப்பின் தனது அரசியல் வாரிசான புதல்வன் நாமல் ராஜபக்கவை ஜனாதிபதியாக்கி தனது இறுதி காலத்தில் தனது குடும்பமே தொடர் ஜனாதிபதியாக உலக சாதனையை புரிந்து கண்மூடவேண்டும் என்பதே.

அதன் ஒருகட்ட நடவடிக்கையாகவே இரண்டு வருடம் ஆட்சி செய்ய சட்டரீதியான அதிகாரம் இருந்தபோதும், அதிக ஆசையை தன் நம்பிக்கையாக்கி தனது சகல அதிகாரத்தையும்  நீதிக்கு புறம்பாக செயல்படுத்தி தனது குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த போட்ட திட்டத்தை மக்கள் ஏதோ ஒருவகையில் மாற்றிவிட்டார்கள்.

இதன் வயது இரண்டு இன்றுடன் முடிவடைகின்றது.

Image result for மகிந்த நாமல்

இது அவரின் அசைக்கமுடியாக நம்பிக்கையை அசைத்து அவரை ஏமாற்றிவிட்டது. எனினும் அவர் இன்றுவரை ஜனாதிபதியென்ற கனவில் இருந்து மீளவில்லை. அவருக்கென தனியாக ஊழல்வாதிகளின் குழு இனவாத மத குழு என்று பல்வேறு அமைப்புக்கள் அவருக்கு துணையாக செயல்படுகின்றது .

இக்குழுக்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டடுள்ளதாக அரசு கூறினாலும்,  நடவடிக்கையில் அசாதாரணபோக்கையே இன்றுவரை கடைப்பிடிக்கின்றது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Image result for மகிந்த நாமல்

தற்போது மகிந்த தான் ஜனாதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைந்துவருவதை மனதளவில் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதே உண்மையாகும். இருந்தும் தான் போட்ட திட்டத்தின்படி தனது புதல்வர் நாமலையாவது என்ன விலை கொடுத்தாவது,  அடுத்த ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி இளம் வேட்பாளராக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுதுளியை கூட விட்டு கொடுக்கும் நிலையில் இல்லை.

அதன் காரணமாகவே அம்பாந்தோட்டையில் சீனர்களின் வியாபார திட்டங்களை எதிர்க்கும் அணியின் தலைவராக பெயர் குறிப்பிடாமல் மகனை களத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

அன்று சீனா அரசின் முகவராக இருந்தவர்   சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வருடம் பூர்த்திசெய்துவிட்டு நாடு திரும்பியவுடன் அம்பாந்தோட்ட பொருளாதார திட்டத்தை எதிர்ப்பது பலத்த சந்தேகத்தையே தோற்றிவிக்கின்றது.

Image result for மகிந்த நாமல்

இது சிங்கள மக்களுக்குள் இன உணர்வை ஏற்படுத்தி இந்நாட்டை பாதுகாக்கவும்,  சிங்கள மக்களை பாதுபாக்கவும் துட்டகைமுனு மறுபிறவியாக தனது குடும்பத்தையே நினைக்கவேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தி,  அதை நிரந்தரமாக பாதுகாத்துக்கொண்டே தனது புதல்வரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவைக்கவும் அதை இளம் சமூதாயம் ஏற்று செயல்படுத்தவும் இவரின் கனவு சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிட்டது.

மகிந்தவின் ஆட்சி காலத்தில் குறிப்பாக தென் இலங்கையில்  சந்திக்கு சந்தி மதவெறியை ஏற்படுத்த புத்தர்சிலைகள் விதைக்கப்பட்டது. அப்பொழுது எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மௌனத்திலேயே இருந்தது. அதை வடக்கு கிழக்கில் விதைக்க பாதுகாப்பு படையின் உதவியுடன் செயல்படுத்தியபோது எதிர்ப்புக்கள்  சிறுபான்மை மக்களிடமிருந்து வந்த போதும் ரணில் மௌனத்தையே கடைபிடித்தார்.

இன்று தெற்கில்  மக்கள் புத்தர் சிலைகளை பராமரிக்க முடியாத அளவு விதைக்கப்பட்டு வளர்ந்துவருகின்றது . அதற்கேற்றவகையில் இனவாத துறவிகளின் தொகையும் அதிகரித்துவிட்டது.

அவர்களை வளர்த்து அதன் மூலம் தனது புதல்வரை ஜனாதிபதியாக்க மகிந்த எடுக்கும் ஓர் திட்டமே,  இப்பொழுது அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டதாகும் . இதன் வளர்ச்சி வட கிழக்கில் செயல்படுத்தும்போது இந்த நாடு இன அழிப்பில் உலக சாதனையைக்கூட எட்டலாம் ஆனால் மகிந்தவின் கனவு நாமலை ஜனாதிபதியாக பார்ப்பதேயாகும்.

இதை மக்களும் தலைமைகளும் புரிந்துக்கொள்ளுமா என்பதே தற்போதைய கேள்வியாகும் ?