நாட்டின் பெரும்பாலான இடங்களில் சீரான காலநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்…!!!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில்  இரவு மற்றும் காலைவேளைகளில் குளிரான காலநிலை நிலவுவதோடு, நுவரொலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் உறைபனி நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று  அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், ஊவா , வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை ,களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்றுவீசக்கூடும்.

நாட்டின் சில பகுதிகளில் பனியுடன் கூடிய காலநிலை நிலவும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.