நாட்டின் பல மாகாணங்களின் மழையுடன் கூடிய காலநிலை…!

நாட்டின் பல மாகாணங்களின் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அனுராதபுரம் , காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு , வடமத்திய ,வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 40 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.