நாசா மையம் ஆராய்ச்சிகளின் புதிய சாதனை!

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதோடு,விண்வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமான புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியது. அதற்கு .ஜி.எல்.– 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி (OGLE-2016-BLG-1190Lb) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தை ஸ்பிட்சர் (Spitzer) விண்வெளி டெலஸ்கோப் மூலம்   நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 22,000 ஒளி தூரத்தில் உள்ளதோடு, இதற்கு துணைக்கிரகம் எதுவும் உள்ளதா என கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.