நாங்கள் ஆட்சியமைத்தால் ரணிலுக்கு ஜம்பர் அணிவிப்போம்!

தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் அரசாங்கத்தின் கீழ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறை காற்சட்டை (ஜம்பர்) அணிவிக்கப்படும் என அந்த முன்னணியின் பிரதித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீரகுமார திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.

விமல் வீரவங்சவின் வார்த்தைகள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதால், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் மாநாட்டின் மீதுள்ள பயம் காரணமாக விமல் வீரவங்சவை பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரத்தில் ஆலோசனை வழங்கியதாக தற்போதைய பிரதமருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை போன்றே விமல் வீரவங்சவுக்கு எதிராகவும் ஆலோசனை வழங்கியதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எமது அரசாங்கத்தின் ஆட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் இவ்வாறான நடவடிக்கையை எடுக்க நேரிடும் எனவும் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.