நாக்கால் சப்பாத்தை சுத்தப்படுத்துமாறு அடித்த கும்பல் – இளைஞருக்கு நேர்ந்த அவலம்!

இந்தியாவில் மராட்டியத்தின் தெற்கு மும்பைக்கு அருகே உள்ள கப்பே பாரடே பகுதியை சேர்ந்தவர் காசிம் ஷேக் .

இவர் அங்குள்ள மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 பேர் காசிம் ஷேக்கை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
அப்போது அவர்களில் ஒருவன் தனது சப்பாத்தில்  உமிழ்ந்து, அதை நாக்கால் சுத்தப்படுத்துமாறு காசிம் ஷேக்கை கட்டாயப்படுத்தினான்.

அவர்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் இருந்து காசிம் ஷேக் ஒருவழியாக வீட்டுக்கு தப்பி சென்றார். எனினும் அவரால் சந்தையில் நடந்த அவமானத்தை தாங்க முடியவில்லை.
எனவே அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனக்கு நேர்ந்த அவமானத்தையும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிசார் காசிம் ஷேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அவரது தற்கொலைக்கு காரணமான 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.