நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் – வீடியோ உள்ளே

தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக நேற்று ஆரம்பமாகியது.

 

இன்று ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் அடுத்த மாதம் 20 ஆம் திகதி இரதோற்சவம் இடம்பெறவுள்ளதோடு 21 ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

 

கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஈழவள நாட்டின் வட புலத்தில் யாழ்ப்பாணம் நல்லை நகரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

 

அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தனின் ஆலயம் யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொன்மை கொண்ட ஆலயமாகும்.

 

நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி இரதோற்சவம் இடம்பெறவுள்ளது.

 

நாள் ஒரு அழகு பெறும் நல்லைக் கந்தன் ஒவ்வொரு திருவிழாவிலும் ஒவ்வொரு அழகோடு வலம் வந்து பக்தர்களை மகிழ்விப்பார்.

கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டும் வரம் வழங்கும் நல்லூர்க் கந்தனிடத்தில் அருளாசி பெற்று மகிழ்ந்தனர்.