நரபலிக்கு ஆளாக இருந்த 7வயது சிறுவன்!

நரபலி கொடுத்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும் என ஜோசியர் ஒருவர் கூறியுள்ளார். ஜோசியரின் பேச்சைக் கேட்டு, கேரளாவில் இருந்து 11 வயது சிறுவனை கடத்திய கும்பல் அவனை உயிரோடு புதைக்கத் திட்டமிட்டது. சிறுவனை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவனை கடத்திய கும்பல் கர்நாடக மாநிலத்தில் நேரலே-ஹெம்மரகல்லா சாலையோரம் இருந்த பண்ணையில் உயிரோடு புதைக்க முயன்றுள்ளனர். இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சிறுவனை மீட்டபோலீசார் 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஜோசியரின் பேச்சைக் கேட்டு, 11 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் கர்நாடாக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.