நம்மவர்களின் புத்தம் புதிய படைப்பில் வெளிவரும்’நூதனன்’ திரைப்படம்!

January 5, 2017 கலைஞன், கலைஞன் செய்திகள் Leave a comment 62 Views

எமது இலங்கை கலைஞர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு உதாரணமாக எமது கலைஞர்கள் பல விடயங்களை சாதித்து வருகின்றனர்.

இந்திய கலைஞர்களை விட குறைவான வளங்களை கொண்டிருந்தாலும் குறைந்த வளங்களில் நிறைவான படைப்புக்களை படைப்பதில் எம்மவர்களுக்கு நிகர் எம்மவர் தான் என்பதில் ஜயமில்லை.

இந்த வகையில் மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மனோஜ் என்பவரின் கதை திரைக்கதை வசனத்தில் வெகு விரைவில் வெளியாகவுள்ள கிரைம் திரில்லர் திரைப்படமே’நூதனன்’ ஆகும்.

இந்தப் படத்தின் இயக்குனராக ராதேயன் ஞானப்பிரகாசமும், உதவி இயக்குனர்களாக எம். சாகரன்,ஐ.சரோன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்த நூதனம் படத்திற்கான இசையினை ஏ.ஜே.ஜெரோனும்,ஒளிப்பதிவினை நிசா ரீகனும் வழங்கியுள்ளனர்.

மட்டு குறுந்திரை வரலாற்றில் அதிக பொருட்செலவிலும் முழுமையான 4k தர காட்சி அமைப்பிலும் தயாராகி வரும் திரைப்படம் நூதனன் தவிர்ந்து 70 க்கும் மேற்பட்ட மட்டக்களப்பு வாழ் கலைஞர்களை ஒன்றிணைத்து முழுவதுமாக மட்டக்களப்பிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளம் கலைஞர்கள் அண்மைக்காலமாக பல குறுந்திரைப்படங்களை வெளியிட்டு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதைப் போல் மட்டக்களப்பு மைந்தர்களின் படைப்பில் வெளிவரும்’நூதனன்’ திரைப்படம்.

இலங்கை கலைஞர்களிடையே இவ் படம்  பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றிருக்கின்றது என்றே கூறலாம்…..

fdgdfg

l