நடிகை சாவித்ரியாக மாறும் கீர்த்தி சுரேஷ்..!!!

 

கோலிவுட்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கீர்த்தியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது. மலையாள நடிகர் துல்கர் சல்மான், காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடிக்கிறார். படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சாவித்ரியின் பிறந்தநாளான நேற்று, பட லோகோவின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு பதிப்பில் மட்டும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.

 

 

நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகையர் திலகம் படத்தில்,  இயக்குநர்கள் க்ரிஷ் மற்றும் தருண் பாஸ்கர் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் தோன்ற உள்ளனர். ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் படத்தை தயாரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.