நகங்களின் அழகுக்கு அழகு சேர்க்க ஹெல்த்தி நெயில் டிப்ஸ்!!

கைகளுக்கு மருதாணி இட்டு அழகு பார்த்ததைத் தொடர்ந்து ‘நெயில் ஆர்ட்’ தான் தற்போதைய ஹாட் ட்ரெண்டு. நிச்சயதார்த்தம், முகூர்த்தம், ரிசப்ஷன் என தீம்களுக்கு ஏற்றவாறு பல டிசைன்களில் நெயில் ஆர்ட் செய்துகொள்ள முடியும்.
*முகத்துக்குப் பயன்படுத்தும் கிளென்சிங் க்ரீமை நகங்களிலும் அப்ளை செய்து மசாஜ் செய்து  கழுவினால் நகங்கள் பிங்க் நிறத்தில் ஆரோக்கியமாக இருக்கும். 

* ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் எடுத்து நகங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் நகங்கள் உறுதிபெறும்.

* வைட்டமின் இ ஆயிலில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து நகங்களை மசாஜ் செய்தால், நகத்தில் உள்ள வரிகள், மஞ்சள் நிறம் மாறிப் பளிச்சிடும்.

* ஒரு கப்பில் தேவையான அளவு ஆப்பிள் சிடர் வினிக்கரை எடுத்து அதனுள் நகங்கள் மூழ்குமாறு பத்து நிமிடங்கள் வைக்கவும். இதனால் நகங்கள் உடையாமல் பாதுகாக்கலாம்.

* நகங்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துள்ள பால், முட்டை, கீரை, பயறு வகைகள், நட்ஸ் என சரிவிகித சத்துணவு எடுத்துக் கொள்ளவும்.

* துணி துவைக்க டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்தும்போது கைகளுக்கு பிளாஸ்டிக் கிளவுஸ் போட்டு நகங்களைப் பாதுகாக்கவும்.

* கலரற்ற ‘பேஸ் கோட்’ நெயில் பாலீஷ் அப்ளை செய்த பின்னர் நெயில் பாலீஷ் போடவும். இதனால் நகங்கள் மஞ்சள் நிறமாவதை தடுக்கலாம்.

* நெயில் பாலீஷ் ரிமூவ் செய்வதற்கு ‘தின்னர்’ பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆல்கஹால் அதிகம் இல்லாத நெயில் பாலீஷ் ரிமூவர் பயன்படுத்தவும்.

* நகங்களை நெயில் கட்டரின் மூலம் கட் செய்யாமல் பிளேடு, கத்தரிக்கோல் அல்லது பற்களால் கடித்து கட் செய்வதைத் தவிர்க்கவும்.