தொலைப்பேசியில் சிங்களத்தில் உரையாடுவது எப்படி?

இன்று எமது லங்காபுரியில் தொலைபேசியில் சிங்கள மொழி பேசும் ஒருவரிடம் எவ்வாறு உரையாடலாம் என்பதனை பார்க்கலாம்.

ஹலோ கவுத கதா கரண்னே– ஹலோ யார் பேசுகின்றீர்கள்.

மம கமல் கதாகரன்னே– நான் கமல் பேசுகின்றேன்

கொஹெத இந்தல கதாகரண்னே– எங்கிருந்து பேசுகின்றிர்கள்.

மம யாபனே இந்தலா கதாகரனவா– நான் யாழ்ப்பாணத்திலிருந்து பேசுகின்றேன்

மொனவத ஹோனே– என்ன வேண்டும்

மட ஒயாகே தாத்தாட கதாகரண்ட ஹோனே– நான் உன்னுடைய அப்பாவிடம் கதைக்க வேண்டும்

தாத்தா ஹெலியட கியா- அப்பா வெளியே போயிருக்கின்றார்

கவதாத ஹென்னே– எப்போது வருவார்

ஹரியட கியன்ட பே– சரியாக சொல்ல முடியாது

கெதரென் வென கவுத இன்னே- வீட்டில் வேறு யாராவது இருக்கின்றார்களா?

அம்மா இன்னவா– அம்மா இருக்கின்றார்.

அம்மாட பொட்டக் தென்ட புலுவங்த– அம்மாவிடம் கொஞ்சம் கொடுக்க முடியுமா?

ஹரி– சரி

அம்மே, அம்மே கவுதோ கதா கரனவா– அம்மா அம்மா யாரோ பேசுகின்றார்

பொட்டக் இன்ன– கொஞ்சம் இருக்கவும்

ஹலோ கவுத– ஹலோ யார் பேசுகின்றீர்கள்.

மம கமல் கதாகரன்னே, ஹொயாகே மாத்தயாகே யாலுவா– நான் கமல் கதைக்கின்றேன், உங்களுடைய கணவரின் நண்பர்

ஹேமத- அப்படியா

ஹெயா தவ டீக்கக்கின் ஹெனவா- அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்

ஹெனாங் மம பஸ்ஸே கதா கரன்னங்- அப்படியென்றால் நான் பிறகு கதைக்கின்றேன்

ஹரி– சரி

தியன்னங்- வைக்கின்றேன்

copy wrights to lankapuri educational unit