தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் நிறைவு…!!!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று(07) நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இன்று நள்ளிரவின் பின்னர் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானதாகும் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஊடகங்களூடாகவும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் கூறியுள்ளார்.