தேர்தலுக்கு பின் நாளை கூடுகின்றது அமைச்சரவை…!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடவுள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிநடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சி சபைகள் பலவற்றை கைப்பற்றி அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ள பரபரப்பான  சூழ்நிலைக்கு மத்தியில் நாளை கூடுகின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.