துன்னாலை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு: வீடு வீடாக சோதனை: மக்கள் அச்சம் – வீடியோ உள்ளே

வடமராட்சி, துன்னாலை பகுதியில் இன்றைய தினம் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். இரு பஸ்களின் மூலம் இவ்வாறு இரவு விசேட அதிரடிப்படையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

அத்தோடு இந்த சுற்றிவளைப்பின்போது இதுவரையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, உரிய ஆவணங்கள் இல்லை என ஒரு சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.