திருமணத்திற்கு ஆறடி ஆணழகனை தேடும் பிரபல நடிகை…!!!

rana-rakul-preet-singh-17-5-14

 

புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு படங்களிலும், இந்தியில் அஜய்தேவ்கன் ஜோடியாக புதிய படமொன்றிலும் நடிக்கிறார்.

சமீபகாலமாக இவரது மார்க்கெட் டல்லடித்திருப்பதாக கிசுகிசு வந்தாலும் இந்த ஆண்டில் 4 படங்களில் நடிப்பதால் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் தன் மீது அதிக கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக நீச்சல் உடையில் திடீர் போஸ் அளித்து கவர்ச்சியாக தனது படங்களை இணைய தளத்தில் பரவவிட்டிருக்கிறார் ரகுல்.

 

dc-Cover-81le3tho5otkgepnqoum9kgtb4-20180131171418.Medi

நடிகர் ராணாவுடன் ரகுலுக்கு காதல் என்றும் செய்தி பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு சமீபத்தில் ரகுல் அளித்த பேட்டிதான் காரணம். ‘உங்களது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்’ என்று ரகுலிடம் கேட்டபோது,’ஆறு அடி உயரத்தில் இருப்பவரைத்தான் கணவராக தேர்வு செய்வேன். ஆறடிக்கு ஒரு இன்ச் குறைந்தாலும் ரிஜெக்ட் செய்துவிடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Rakul-Preet-Singh

 

வழக்கமாக வருங்கால கணவர் நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும் என்றே நடிகைகள் பதில் கூறுவதுண்டு. ஆனால் உயரத்தை முக்கியமாக கூறுவதற்கு காரணம், ராணா ஆறடி உயரம் இருப்பவர் என்பதை சூசகமாக தெரிவிக்கவே ரகுல் இப்படி சொல்வதாக குறிப்பிடப்படுகின்றது. சமீபகாலமாக இருவரும் நெருக்கமான நட்புடன் பழகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

1517259464-RAKUL-PREET-RANA-DAGGUBATI