தாயுக்கு வந்த உயர்தர பெறுபேறு!ஆச்சரியத்தில் மகள்!

மகளின் முயற்சியால் தாயுக்கு உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ள சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது….

சுபாஷினி விக்ரமசிங்க என்பவர் உயர் தரத்திற்காக உயிரியல் பாடத்தில் தோற்றியுள்ளார். காணப்பட்ட சூழலுக்கு மத்தியில் உயர்தரத்திற்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஒன்று அவருக்கு கிடைக்கவில்லை.

1986ஆம் ஆண்டு அவர் வீரகெட்டிய ராஜபக்ச மத்திய மகா வித்தியால மாணவியாக அவர் பரீட்சைக்கு ஆயத்தமாகியுள்ளார். பின்னர் பரீட்சையை தூரமாக வைத்துவிட்டு அவர் திருமணத்தை தெரிவு செய்துள்ளார். படிப்பதற்கு ஆசை இருந்த போதிலும் பிள்ளைகள் இருவரும் பெரியர்களாகும் வரை அவரது அந்த மூடி மறைக்கப்பட்டது.

குடும்பத்தில் இளைய மகள் கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளதோடு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியுள்ளார்.

அம்மாவின் கல்வி ஆசைக்கு மகளிடம் இருந்து கிடைத்த உதவியினால் 2016ஆம் ஆண்டு அவர் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த தாயார் தனக்கு சீன மொழி கற்கும் ஆர்வம் இருந்ததாகவும், சீன மொழியை கற்று உயர்தரத்திற்கும் சீன மொழியை தெரிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மகளின் புத்தகங்களை தான் கற்றதாகவும் சுபாஷினி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் அவர் சீன மொழியில் B சித்தியும், ஏனைய இரண்டு பாடங்களில் C சித்தியும் பெற்றுள்ளார்.

இவருடைய பெறுபேரை பார்த்த மகள் ஆச்சரியப்படதாகும் தெரிவிக்கப்படுகின்றது.