தானா சேர்ந்த கூட்டம் – ஸ்கெட்ச் – முதல் நாளில் யார் டாப்..?

தமிழ்சினிமாவின் கடின உழைப்பிற்கு பெயர் போன இரண்டு நடிகர்களின் படங்கள் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. நடிகர் சூர்யாவின் ஸ்கெட்ச் மற்றும் நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் தான் அவை.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மோசம் என்று இல்லாமல் சொல்லிக்கொள்ளும் படியான வரவேற்ப்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த படங்களின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 75 வசூல் செய்துள்ளது. ஆனால், நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் திரைப்படம் 38 லட்சம் ரூபாய்களை மட்டுமே வசூல் செய்துள்ளது.

இதுவரை வெளியான சூர்யா படங்களில் இந்த படம் தான் சென்னையில் முதல் நாளிலேயே அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெறுகிறது தானா சேர்ந்த கூட்டம்.