தாத்தா, பாட்டி மரணம்! 3 நாட்களுக்கு பின் குழந்தைக்கு என்ன நடந்தது!

தாத்தா மற்றும் பாட்டி இறந்தது தெரியாமல் 3 வயது குழந்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து வீட்டின் அறையின் உள்ளே அழுதுள்ளார்.

தைவான நாட்டின் Keelung நகரத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினர் தங்களது 3 வயது பேரனுடன் வசித்து வந்துள்ளனர்.

குழந்தையின் பெற்றோர் வெளியில் வேலைக்கு செல்வதால், இவர்களிடம் விட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் அங்கு ஒரு சிறிய அளவிலான உணவுக் கடை வைத்துள்ளனர். இரண்டு நாட்களாக கடையும் திறக்கப்படவில்லை, வீட்டில் இருந்த கதவும் திறக்கபடவில்லை.

2 நாட்களாக அறையில் கதறிய 3 வயது குழந்தை: கதவை உடைத்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது பொலிசார் உடனடியாக வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, அவர்கள் ஆசையாக வளர்த்து வந்த 3 வயது பேரன் தொடர்ந்து தாத்தா, பாட்டி என்று அழுத படியே இருந்துள்ளான்.

உள்ளே சென்று பொலிசார் பாத்த போது, அவர்கள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். அதில் தாத்தா வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடந்துள்ளார்.

பாட்டி வீட்டின் ஹாலில் இருக்கும் போனை கையில் வைத்த படி இறந்து கிடந்துள்ளார்.

2 நாட்களாக அறையில் கதறிய 3 வயது குழந்தை: கதவை உடைத்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பொலிசார் இது குறித்து கூறுகையில், குழந்தை இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து அழுத படி இருந்துள்ளான். அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அதுமட்டுமின்றி குழந்தையின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளோ. கடந்த் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையின் தாத்தாவிற்கு மூளையில் கட்டி இருந்துள்ளது.

2 நாட்களாக அறையில் கதறிய 3 வயது குழந்தை: கதவை உடைத்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அது தொடர்பாக தொடர்ந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் சம்பவ தினத்தன்று அவருக்கு ஏதேனும் ஆகியிருக்கலாம்.

இதனை உடனடியாக தெரிவிப்பதற்கு அவரின் மனைவி போனை எடுத்த போது, அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பதால், அவர் மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

இருப்பினும் இது தொடர்பான தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.