‘தல 57’ படப்பிடிப்பின் புதிய அப்டேட்!

அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல்கேரியா உள்பட ஒருசில ஐரோப்பிய நாடுகளிலும், ஐதராபாத்திலும் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு அஜித்துக்கு ராசியான சென்னை பின்னி மில்லில் நடைபெறவுள்ளது.

இதற்கான செட் அமைக்கும் பணி இரவுபகலாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பல்கேரியா நாட்டில் நடைபெறும் இண்டோர் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் ‘தல 57’ படக்குழுவினர் பல்கேரியா செல்லவுள்ளதாகவும், படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

‘வதம்’ அல்லது ‘வியூகம்’ என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபரா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும்பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கின்றது.