தமிழ் ராக்கர்சிடம் காலில் விழுந்து கதறிய விக்னேஸ் சிவன்?

வழக்கம் போல பொங்கல் பண்டிகைக்கு பிரபல நடிகர்கள்களான சூர்யா, விக்ரம், பிரபு தேவா ஆகியோரது படங்கள் வெளியாகியுள்ளன. அதே, வழக்கம் போல முதல் நாள் காலை 10 மணிக்கே திருட்டு வீடியோ இணையதளமான தமிழ் ராக்கர்ஸிலும் படம் வெளியாகிவிட்டது.

சினிமா உலகை ஆட்டிப்படைக்கும் இந்த தளங்கள் பெருவாரியான வசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், இன்று வெளியான தான சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் ராக்கர்ஸ் குழுவிற்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, ” தமிழ்ராக்கர்ஸ் குழுவே..! உங்கள் இதயம் இருந்தால், தயவு செய்து எங்களது கண்ணீரை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த நாளிற்காக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம், வரி பிரச்னை, திரையுலக பிரச்சனை என பலவற்றையும் கடந்து தான் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளோம். தயவு செய்து இதனை செய்யாதீர்கள்..!” இவ்வாறு கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.