தமிழ் மொழிப்பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கிழக்கு வடக்கு மற்றும் மத்தியமாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு (தேசிய பாடசாலைகள் தவிர) நாளையதினம் (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 21.01.2017 ம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.