ஜனாதிபதிகளின் ரகசியங்கள்! தமிழ் மக்களை சார்ந்ததா?

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது, இவரின் அமைச்சரவையில் இவரின் அனுமதியுடனும் பல வரப்பிரசாதங்களையும் ஊழல்களையும் செய்த அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்களில் அடங்கிய சகல விபரக்கோவை தன்னிடம் இருப்பதாக மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஜனாதிபதியாக தன்னை தேர்ந்தெடுத்த பின் அவர்களுக்கு தகுந்த பாடத்தை படிப்பிப்பதாகவும், மேலே கூறியதை போல் தற்போதைய ஜனாதிபதியும் அண்மையில் மகிந்த குழு தனியாக பிரிந்து செயல்பட்டால் தான் இதுவரை பாதுகாத்த பல ரகசியங்களை வெளியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இரண்டு பெயரிடமும் பல ரகசியங்கள் இருப்பதையே இவர்களின் கூற்று உறுதிபடுத்துகின்றது அப்படியானால் அது தமிழர்களை பற்றியதாகவே இருக்கலாம்.

அப்படியானால் தமிழ் அரசியல் அவதானிகளின் கூற்றுப்படி இவர்களிடம் உள்ள ரகசியம் விடுதலைப்புலிகளை பற்றியதாகவோ அல்லது இவர்களுக்கு உதவிய தமிழ் அரசியல்வாதிகளாகவோ இருக்க வேண்டும்.

mpss

காரணம் தமிழ் மக்கள் சமபந்தப்பட்ட  விடயங்களாக இருந்தால் மாத்திரமே பெரும்பான்மை சிங்கள மக்களையும் இனவாத அரசியல்வாதிகளையும் திருப்தி படுத்தி தங்களின் அரசியலை முன்னோக்கி செழிப்பாக நடாத்த முடியும்.

உண்மையை சில காலமே மறைக்க முடியும். அவைகள் ஒரு நாள் நிச்சயம் வெளிபட்டே தீரும் அந்த காலம் இப்போது மலர்ந்து விட்டதோ ?

அதன் காரணமாக உண்மைகள் வெளிவர போகின்றதோ? என எண்ண தோன்றுகின்றது. எனவே நிச்சயம்  சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கும்  இதில் பங்கு இருக்கலாம் எனவும் அவர்கள் யார் ?அந்த கருப்பு ஆடுகள்((Black ship)  யார் ?

அந்த உண்மையை இவர்களில் யார் முன் தெரிவிக்கப்போகின்றார்கள். இதுவே இலங்கை மற்றும் உலக வாழ் தமிழ் மக்களின் எதிர்ப்பாக  உள்ளது.

உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளிவரும் என்பதை நாம் உணர்த்தும் காலம்  இப்பொழுது மலர்ந்துவிட்டதா ? பொருந்திருந்து பார்ப்போம் தமிழ் மக்களே….!!