தமிழனுக்கு விருந்தளித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஒரு கட்டத்தில் இந்திய அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக இருந்தார்.

அஸ்வின் வந்த பின்பு, அவரின் இடம் கேள்வி குறியானது. இது போன்று ஹர்பஜன் சிங் வாழ்க்கையின் இக்கட்டான காலக்கட்டங்களில், தமிழகத்தின் திண்டுக்கலைச் சேர்ந்த சரவணன் என்பவர் அவருக்கு ஆதரவாக டுவிட் போட்டு வந்துள்ளார்.harbhajan-casual-getty

திண்டுக்கலைச் சேர்ந்த சரவணன் அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சரவணன் டுவிட்டர்களை பார்த்து நெகிழ்ந்து போன, ஹர்பஜன் அவரை பார்க்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி ஹர்பஜன் தனது மேலாளரின் தொலைப் பேசி எண்ணைக் கொடுத்து சரவணனை அவரிடம் பேசும் படி கூறியுள்ளார். இதையடுத்து சரவணனும் மேலாளரிடம் பேசியுள்ளார்.

சரவணன் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் போன்ற முழு விவரங்களையும் ஹர்பஜன் மேலாளரிடம் கேட்டு தெரிந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கலில் பஞ்சாப் , தமிழக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, பஞ்சாப் அணியில் ஹர்பஜன் இடம் பெற்று இருந்தார்.

அப்போது, திண்டுக்கல்லுக்கு வந்த ஹர்பஜன் சிங், சரவணனை மறக்காமல்தொலைபேசியில் சரவணனுக்கு அழைப்பு விடுத்து தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வரவழைத்து சந்தித்துப் பேசினார்.

அப்போது ஹர்பஜன் சிங்கிடம் சரவணன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இதனால் இருவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹர்பஜனுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து சரவணன் செய்தியை ஹர்பஜன் சிங் பெருமையாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுருந்தார்.fvd

இது குறித்து சரவணன் கூறுகையில், ஹர்பஜன் சிங் சரியாக விளையாடாதபோது, அவர் குறித்த விமர்சனங்கள் டுவிட்டரில் வரும் போது அவர்களுக்கு மிகவும் நாகரிகமான முறையில் பதில் அளித்து வந்தேன்.

இது அவரை வெகுவாகக் கவர்ந்தது. முதன் முதலில் என்னை ஹர்பஜன் டுவிட்டரில் பின்தொடர்கிறார் என்றுதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

மேலும் தற்போது அவரை சந்தித்தும் விட்டேன் இதைவிட வேறு என்ன வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த ஹர்பஜன், இந்த ஆண்டு டோனி தலைமையிலான சென்னை அணிக்கு விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.