தனிமையில் இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில டிப்ஸ்!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்குமே இல்லை. தினம்தினம் பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், வன்கொடுமை, கொலை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அப்படிப்பட்ட நிலைமை வந்தால் எப்படி பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ளலாம் நள்ளிரவில் பெண்கள் தனியாக முச்சக்கரவண்டி, டாக்சி ஏற நேர்ந்தால் என்ன செய்வது?

முச்சக்கரவண்டியில் ஏறுவதற்கு முன்பாக அதனுடைய ரெஜிஸ்ட்ரேசன் நம்பரை குறித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வீட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தொடர்பு கொண்டு டிரைவருக்கு புரியும் விதத்தில் அவரை பற்றியும், ஆட்டோ பற்றிய விவரங்களையும் தெரிவித்து விடுங்கள்.

உங்கள் தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்காவிட்டாலும் கூறுவது போல் நடிக்கவாவது செய்யுங்கள்.

இதன் மூலம் ஆட்டோ டிரைவர் தான் ஏதேனும் தவறாக நடக்க முயற்சித்தால் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்துகொள்வார்.

இரவில் தனியாக வரும் போது யாராவது உங்களை துரத்தினால் ஏதாவது ஒரு வீட்டிற்குள்ளோ, கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி உதவி கேளுங்கள். அப்படி இல்லை என்றால் ஏதேனும் ஒரு ஏடிஎம்க்குள் நுழைந்து விடுங்கள்.

அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பார்கள். மேலும் அங்கு கேமராவும் இருக்கும்.

அதனால் யாரும் உங்களை எதுவும் செய்ய இயலாது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை யாரேனும் தாக்க நேர்ந்தால் என்ன செய்வது?

உடனடியாக கிச்சனுக்குள் சென்று விடுங்கள்.

உங்களுக்கு மட்டும்தான் மஞ்சள், மிளகாய் பொடி எல்லாம் எங்கு இருக்கும் என்று தெரியும்.

மேலும் கத்தி, தட்டுகள் கூட ஆபத்தான ஆயுதங்களாக மாறலாம். எந்த பாதுகாப்பும் இல்லாத சமயத்தில் இவற்றை அவன் மேல் விட்டெறியுங்கள்.

சத்தம் அப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு மிக பெரிய எதிரி. எப்பொழுதும் பேனா கத்தி, பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றையும் உங்களது கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் நாமே நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.