தடைபட்ட நாடுகளில் பாகிஸ்தானும் சேர்க்கப்படலாம்!

குடிநுழைவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஈரான், ஈராக், லிபியா, சிரியா, சூடான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு, அமெரிக்காவுக்குள் நுழைய அடுத்த 3 மாதத்துக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அந்த ஏழு நாடுகளில் பயங்கரவாதச் சம்பவங்களின் எண்ணிக்கை அபாயகரமான நிலையை எட்டியிருப்பதை அமெரிக்க நாடாளுமன்றமும் முன்னைய அதிபர் ஒபாமாவின் அரசாங்கமும் அடையாளம் கண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

உரிய விசா அனுமதி இருந்தும், முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட அந்த ஏழு நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். 200 பேர் வரை அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கக் கூடுமென மதிப்பிடப்படுகிறது. அடுத்த விமானத்தில் அவர்கள் திருப்பி அனுப்பப்படலாம் என்று மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.