தடைகளை தகர்த்தெரிந்து சாதனையின் உச்சத்தில் மகிந்த..!!!!

கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் அனுபவித்த துன்பங்களை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வெற்றி தொடர்பில் பிரபல ஊடகமொன்று தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சிக்கு உரிய உரிமைகள் கூட கிடைக்காத நிலையில் இவ்வாறான வெற்றி வரலாற்றில் முன்னொருபோதும் கிடைக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.

எப்பொழுதும் வெற்றியீட்டவே முடியாது என்ற நிலையில் இருந்த நகரங்களில் கூட பொதுஜன முன்னணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.