டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் ரத்து..!!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எதிர்வரும் பெப்ரவரி மாதம் லண்டனில் புதிதாக கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் வகையில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ம்பின், பிரித்தானிய விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஓபாமா நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில் தான் ஆர்வம் கொள்ளவில்லை என டிரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.