ஜீ.வி. பிரகாஷீன் அடுத்த திரைப்படம் 2.0 வாம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது.

இந்த படத்தை தொடர்ந்து, அவர் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் படுத்தோல்வியை எட்டியது. தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணையப் போகிறார் ஆதிக்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தை 3டி-ல் உருவாக்கி வருகிறார்கள்.

‘அரண்மனை’ படத்தை தயாரித்த விஷன் ஐ மீடியா நிறுவனம், இப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகிறது.

மேலும் ரஜினியின் 2.0 படத்தை போலவே இந்த படத்தையும் 3டி கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்போகிறார்களாம்.