ஜல்லிக்கட்டு களத்தில் அதிரடியாக கிளம்பிய தனுஷ்!

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீரவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலகினர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, உள்பட பலர் குரல் கொடுத்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஒரு படி மேலே போய் ஜல்லிக்கட்டு ஆதரவு பாடலையும் இயற்றியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த ஜல்லிக்கட்டு களத்தில் தனுஷூம் குதித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களோடு கலந்த ஒன்று.

இது வீரத்தமிழர்களின் அடையாளம். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும்’ என தனுஷ் பதிவு செய்துள்ளார்.