ஜப்பானில் நில நடுக்கம்: இலங்கையின் நிலை என்ன?

ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் அந்நாட்டின் உள்ளுர் நேரப்படி இன்று காலை 6.00 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த வித பாதிப்புமில்லை என்று வளிமணடவியல் திணைகடகளம் இன்று காலை அறிவித்துள்ளது.

குறித்த நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. புக்குசிமாவுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த பல பிந்திய நிலநடுக்கங்களும் உணரப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

3 மீட்டர் (10அடி) உயரத்தில் கடல் அலைகள் உருவாகலாம் என ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் புக்குசிமா அணு உலை பாரிய சேதத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.