ஜனாதிபதி தேர்தலில் தமிழ்கட்சிகள் யார் பக்கம்?

January 12, 2017 இலங்கை செய்திகள் Leave a comment 197 Views

தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என இக்கட்சியின் சில பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

இந்தவிடயம் தற்போது தமிழ் கட்சிகளிடையே அதிக முக்கியத்துவம் பெறாவிட்டாலும் ஐ.தே.கட்சியும் தற்பபோது அலட்டிக்கொள்ளவிட்டாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றால் தமிழ் கட்சிகள் யாரை ஆதரிக்கும் என்பது சிக்கலான விடயமாகத்தான் இருக்கும். காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரி பக்கமா அல்லது சில வேளை ரணில் விக்ரமசிங்க ஐ.தே.கவில் போட்டியிட்டால் யாரை ஆதரிக்கும் ?

தமிழ் மக்களை ஏமாற்றி தங்களின் தேவைகளை செயல்படுத்திக்கொண்டிருந்த இவ்விரு கட்சிகளும் தற்போது இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை சிறிது சிறிதாக தமிழ் மக்கள்  இழந்து வரும் இவ்வேளையில்  தமிழ் மக்களின் தீர்வு திட்டத்தை மறந்து ஏதோ தமிழ் மக்களுக்கு கொடுக்கப்போவதாக இந்த இரு கட்சிகளும் கூறிக்கொண்டு ஒன்றிணைந்து இரண்டு வருட காலத்தை கடத்திவிட்டது.

இதுவரை தமிழ் கட்சிகளால் கூறப்பட்ட விடயங்களோ அல்லது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களோ நிறைவேற்றப்படாமலேயே இருந்து வரும் இவ் வேளையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலைப்பற்றிய செய்திகளை ஸ்ரீ.லங்கா சுதந்திர கட்சி பிரமுகர்கள் பேசத்தொடங்கிவிட்டார்கள்.

எனவே தமிழ் மக்களின்  தீர்வு திட்டம் தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருக்குமா ? அல்லது தமிழ் தலைமைகள் அடுத்த ஜனாதிபதி தேர்தலைபற்றிய தற்போதைய கருத்துக்களை வைத்து பிரச்சினையை தீர்க்க  ஏதாவது முயற்சிக்குமா ?

இல்லை இரு தலைவர்களிடமும் நம்பிக்கையுள்ளது பொருமையை காப்போம் என்று காலத்தை கடத்துமா ? இது  தமிழ் மக்களிடயே இருக்கும் சந்தேகமாகும்.