“ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும்” விரக்தியில் விஷால்!

வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

நடிகர் விஷாலுக்கு ஆதரவாக வேட்பு மனு படிவத்தில் கையொப்பம் இட்ட இரண்டு பெயர்களின் கையெழுத்து போலியானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக நடிகர் விஷால் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று முறையிட்டார். இருப்பினும் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக தெரிவித்தார். நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ள நடிகர் விஷால் ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.