சௌமியாவின் இறப்புக்கு காரணம் இதுவா???

பலாங்கொடை – ரன்தொலவத்த பகுதியில் பாதிமா சௌம்யா என்ற 10 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமியின் தந்தை இவர்களை விட்டுச் சென்ற நிலையில், சம்பவம் நடைபெற்ற தினம் தாயார் வேலைக்கு சென்றுள்ளார். வேலையை முடித்துக்கொண்டு சிறுமியின் தாய் வீடு திரும்பிய போது, மகளை காணவில்லை என தேடியுள்ளார். இதன்போது வீட்டின் பின்பகுதியில் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கைத்தொலைபேசி பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.