சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் திகதி முடிவடையும்..!!!

சேதமடைந்த நாணயத் தாள்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முடிவடையும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாணயத் தாள்களின் தூய்மை நாட்டின் நற்பெயரில் தாக்கம் செலுத்துகிறது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டின் நாயணத்தாள்கள் சுத்தமில்லாத நிலையில் காணப்படுகின்றன.

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டு நாணயத்தாள்களின் சுத்தம் பற்றியும் கவனம் செலுத்துகிறார்கள். நாணயத் தாள்களின் சுத்தம் பற்றி மக்கள் மத்தியில் போதிய விளக்கம் இல்லை என்றும் மத்திய வங்கி குறிப்பிடப்பட்டுள்ளது.