செல்லப் பிராணிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்

நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு வரும் நோய்களை எதிர்கொள்வதற்கு, நோய் வருவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதோ உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நோய் வந்துள்ளதா என்பதை அறிவதற்கான சில அறிகுறிகள் இதோ!

மாறுபட்ட செயல்பாடுகள்
உங்களுடைய செல்லப்பிராணி மிகவும் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதனுடைய நடவடிக்கைகளில் திடீரென ஏற்படும் ஏதாவதொரு மாற்றமோ, உடல் ரீதியான மாறுதல்களோ நோய் வந்ததற்கான அறிகுறிகளில் முதன்மையானவையாகும். நாய்களைப் பொறுத்த வரையில், அவை நடந்து செல்லவோ அல்லது விளையாடுவதையோ விரும்பாமல் இருக்கும். பூனைகள் எந்தவொரு காரணமும் இல்லாமல் கோபத்துடன் திரிந்து கொண்டிருக்கும்.

உடல் தோற்றத்தில் மாறுதல்
செயல்பாடுகளை விட, தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்கள் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். உங்களுடைய விலங்குகள் சரியாக முகர்ந்து பார்க்கும் மற்றும் கண்கள் மிகவும் பிரகாசமாக இருக்கும். தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். உங்களுடைய சோபா மற்றும் தளங்களில் பிராணிகளின் முடிகள் உதிர்ந்து கிடந்தாலோ அல்லது அவற்றின் எடை திடீரென குறைந்து விட்டாலோ, உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகவும்.

பசி இல்லை
உங்களுடைய செல்லப் பிராணி எதையும் சாப்பிட மறுக்கிறதா? இதன் காரணம் வெளிப்படையானது. அவற்றின் பசியின்மை குறிப்பிட்ட காலத்தையும் தாண்டி இருந்தால், கண்டிப்பாக ஏதோ பிரச்சனை உள்ளது. இதன் மூலமாகவும் நீங்கள் செல்லப்பிராணிகளின் உடல் நலத்தை அறிய முடியும்.

சுவாச பிரச்சனைகள்
உங்களுடைய செல்லப் பிராணிகள் நோய்வாய்ப் பட்டுள்ளதா என்பதை சரியாகத் தெரிந்து கொள்ளும் வழிமுறை எது? உங்களுடைய பிராணிக்கு தும்மல், இருமல் அல்லது சுவாசிப்பதில் தொந்தரவு உள்ளதை கவனித்திருக்கிறீர்களா? இந்த அறிகுறிகள் சுவாசப் பிரச்னைகளைத் தூண்டக் கூடும். அவற்றின் மார்பில் ஏதாவது தொற்று இருக்கலாம். எனவே மருத்துவ கவனிப்பு இங்கே அவசியம்.

தாகம் இல்லாமை
சாப்பிட மறுக்கும் செல்லப் பிராணி, எதையும் குடிக்கவும் கூட மறுக்கலாம். இது மிகவும் மோசமான பிரச்சனை என்பதை உடனடியாக உணருங்கள். விலங்களுக்கு நீர்ப்போக்கு ஏற்படுவதால், மோசமான சுகாதார விளைவுகள் ஏற்படும். அதுவும் முதல் 18 மணி நேரத்திற்குள் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்காமல் இருந்தால் தொந்தரவு நிச்சயம் உண்டு.

வாந்தி
உங்களுடைய செல்லப் பிராணிக்கு உடல் நலமில்லை என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும்? உங்களுடைய செல்லப் பிராணிகள் அவை விரும்பாத உணவுப் பொருட்களைத் தூக்கி எறிந்தால் ஆச்சரியம் இல்லை. எனினும், அவை எதையாவது சாப்பிட்டு விட்டு அடிக்கடி வாந்தி எடுத்தால் கவனம் தேவை. பூனைகள் மற்றும் நாய்கள் வாந்தி எடுப்பதற்கு சிறுநீரக பாதிப்புகளும், வைரஸ் தொற்றுகள் அல்லது விஷம் கலந்த எதையாவது சாப்பிடுதல் போன்றவை காரணங்களாக உள்ளன.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப் போக்குடன் சேர்த்து வாந்தி வருவது மிகவும் மோசமான தொந்தரவாகும். நாய்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது சகஜமாக இருந்தாலும், அவற்றை வீட்டு மருத்துவம் மூலமாக (சர்க்கரையில்லா பூசணியைக் கொடுத்தல், 24 மணிநேரத்திற்கு சாப்பிட வைக்காமல் இருத்தல்) சரிசெய்ய முடியாவிட்டால், பிரச்சனை பெரியது என்பதை உணருங்கள்.

பிறாண்டுதல்
உங்களுடைய செல்லப் பிராணிகள் தொடர்ந்து பிறாண்டிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால், உண்ணிகள் மற்றும் பூச்சிகளால் அவை பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை உணருங்கள். இந்த ஒட்டுண்ணிகளை அழிக்க விரும்பினால் உங்களுடைய செல்லப் பிராணிகளை குளிக்க வைத்து, வியாபார ரீதியிலான சிகிச்சைகளை எடுக்கவும். உதாரணமாக, உங்களுடைய பறவை பிறாண்டிக் கொண்டே இருந்தால், மஞ்சள் கலந்த தண்ணீரில் குளிக்க வையுங்கள்.

உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நோய் வரும் அறிகுறிகளை எப்பொழுதும் கவனித்து வாருங்கள். இந்த அறிகுறிகள் அதிகரிக்கும் போது மருத்துவரை அணுக தாமதிக்க வேண்டாம்.