சூர்யாவின் 36-வது படம் குறித்த தகவல்!

September 18, 2016 சினிமா செய்திகள் Leave a comment 81 Views

சூர்யா நடித்து வரும் 34வது படமான ‘எஸ் 3’ படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும், அவருடைய அடுத்த படமான 35வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 36வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அதிகாரபூர்வமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜோக்கர்’, கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் ‘காஷ்மோரா’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்தான் சூர்யாவின் 36-வது படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் ஹீரோயின், இயக்குனர் உள்பட மற்ற விபரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.