சூப்பரான ஐஸ்கிரீம் ஈசியா செய்யலாம்!

தேவையான பொருட்கள்
பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – தேவைக்கேற்ப

கார்ன் மாவு – 2 தேக்கரண்டி

வெண்ணெய் – 4 தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் – சிறிது

 

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். அடுப்பின் தணலை மிதமாக வைத்திருக்கவும். பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்து மீண்டும் சிறிது நேரம் காய்ச்சவும்.

கார்ன் மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.

பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். ஆறியதும் பீட்டரை (beater) வைத்து நன்கு கலக்கி ஃப்ரீசரில் வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து பீட்டரால் மீண்டும் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) வைக்கவும்.

ஐஸ்க்ரீம் நன்கு செட் ஆனதும் பவுலில் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.