சுவையான வெண் பொங்கல்…

தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு – சிறிது
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டு, மூன்று அல்லது மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் இஞ்சியைப் பொடியாகத் துருவிச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும். பின் ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் (இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்), கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்) சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.