சுவையான ஓட்ஸ் கேசரி…..

தேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
பால் – 1 கப்
நெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கேசரி கலர் – சிறிது
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
முந்திரிப்பருப்பு – சிறிது
காய்ந்த திராட்சை – சிறிது

செய்முறை:
ஒரு தாச்சியில் (வாணலியில்) ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஓட்ஸைப் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
பின்னர் அதில் பாலை ஊற்றிக் கிளறி விடவும். மிதமான தீயில் கெட்டியாகும் வரை வேக விடவும்.
பின்னர் அதில் சீனி (சர்க்கரை) மற்றும் கேசரிக் கலரைச் சேர்த்துக் கிளறவும்.
1 அல்லது 2 டீஸ்பூன் நெய்யை விட்டு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை விடாமல் கிளறவும்.

முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து கேசரியில் சேர்க்கவும்.
ஏலக்காய் தூளையும் அதில் தூவி, நன்றாகக் கிளறவும்.
கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது,
அடுப்பிலிருந்து இறக்கி, வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.