சுவையான இறால் வறுவல்..!!!

seafood-delight-prawn

தேவையான பொருட்கள்

  • இறால் — 1/2 கிலோ
  • சின்னவெங்காயம் — 50 கிராம்
  • பச்சை மிளகாய் — இரண்டு
  • இஞ்சிப் பூண்டு விழுது —  2 டீ ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் — 1 டீ ஸ்பூன்
  • மல்லித்தூள் — 1/2 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் — 1/2 டீஸ் பூன்
  • உப்பு — தேவையான அளவு
  • எண்ணெய் — 2 டீ ஸ்பூன்
  • கடுகு, உளுந்து — சிறிதளவு
  • கறிவேப்பிலை – தாளிக்க  சிறிதளவு

செய்முறை

  1. சின்னவெங்காயம், பச்சை மிளகாயை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
  2. எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  3. பின் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள்.
  4. பின் சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து தீயை குறைந்த அளவில் வைத்து சிவக்கும் வரை வறுத்தெடுத்து சுவைக்கவும்.