சுவையான ஆப்பிள் அல்வா..!!

தேவையான பொருட்கள்

ஆப்பிள் துருவியது – 500 கிராம்

கோதுமை மாவு – 500 கிராம்

நெய் – 250 கிராம் ஏலத்தூள் – சிறிதளவு

சீனி – 1 கிலோ பால் – 500 மில்லி

முந்திரி பருப்பு – 200 கிராம்

கேசரி பவுடர் – சிறிதளவு

செய்முறை

பாலில் துருவிய ஆப்பிள் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்துகிளறவும். சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரி பருப்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி விடவும். இது சுவையாக இருக்கும்.  இது ஒரு சத்தான இனிப்பாகும்.