சுவைப்பதற்கு கறிவேப்பிலை மீன் வறுவல்!

தேவையானவை

பாம்ஃப்ரெட் மீன் (Pomfret Fish) – 1

தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

கறிவேப்பிலை – 1 கையளவு

மிளகு – 1 மேசைக்கரண்டி

வரமிளகாய் – 2-3

பூண்டு – 4 பற்கள்

பச்சை மிளகாய் – 3-4

மல்லித் தூள் – 2  மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் – 1/2 மேசைக்கரண்டி

சீரகப் பொடி – 1  மேசைக்கரண்டி

கரம் மசாலா – 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு – 3-4

உப்பு – தேவையான அளவு
செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த மசாலாவை மீனில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தவா அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை வைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!