சுதந்திர கட்சி தமிழீழத்தை அங்கீகரித்து விட்டதா?

யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் புலிகளின் புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்தமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழீழத்தை அங்கீகரித்து விட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவீட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.